நேந்திரம் பழம் அப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
நேந்திரம் பழம் – 1
எண்ணெய் – தேவையான அளவு
மாவிற்கு:
மைதா – 1 கப்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
ஏலக்காய் – 2 (தட்டியது)
செய்முறை:
முதலில் நேந்திரம் பழத்தை எடுத்து தோல் நீக்கியபின், தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்து கொள்ளவும். பின்பு சிறிய பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு,சர்க்கரை, உப்பு, ஏலக்காயை போட்டு நன்கு கட்டி இல்லாமல், மென்மையாகவும், கெட்டியாகவும் கலந்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
மேலும் எண்ணெய் நன்கு கொதித்ததும், நறுக்கிய நேந்திரப்பழ துண்டுகளை எடுத்து, கலந்து வைத்த மாவில் நனைத்து, அப்படியே அதை கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு, நன்கு வேக வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறினால், ருசியான நேந்திரம் பழம் அப்பம் தயார்.