Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நீங்க டயட் follow பன்றிங்களா ? அப்போ இந்த ரெசிபிய சாப்பிடுங்க போதும்..!!

ஓட்ஸ் டயட் இட்லி செய்ய தேவையான பொருட்கள் :

சம்பா கோதுமை ரவை     – ஒரு கப்
ஓட்ஸ்                                        – அரை கப்
உப்பு                                            – தேவையான அளவு
புளித்த தயிர்                           – ஒரு தேக்கரண்டி

தாளிக்க:
கடுகு                                           – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு                   – அரை தேக்கரண்டி
கடலை பருப்பு                        – அரை தேக்கரண்டி
நறுக்கிய இஞ்சி                      – அரை தேக்கரண்டி
நறுக்கிய பச்சைமிளகாய்  – அரை தேக்கரண்டி
பெருங்காயம்                          – ஒரு சிட்டிகை
எண்ணெய்                                – 2 தேக்கரண்டி
முந்திரி                                      – தேவையான அளவு

செய்முறை :

முதலில் இஞ்சி, பச்சைமிளகாயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஓட்ஸை  மிக்ஸிஜாரில் போட்டு அரைத்து மையாக அரைத்து கொள்ளவும்.

மேலும் ஒரு பாத்திரத்தில் அரைத்த ஓட்ஸை போட்டு, அதனுடன் கோதுமை ரவை, புளித்த தயிரை சேர்த்து சிறிதளவு உப்பு தூவி, தேவையான அளவு தண்ணீர்  ஊற்றி,  இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து, அதில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளித்ததும், அதில் நறுக்கிய இஞ்சி துண்டுகளை போட்டு வதக்கியபின், நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் நன்கு வதக்கவும்.

பின்பு வதக்கிய கலவையை இறக்கி வைத்து, இட்லி பதத்தில் கலந்து வைத்த கலவையில் ஊற்றி, நன்கு கிளறிவிட்டு அரை மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். மேலும் அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பை போட்டு, பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

பிறகு அடுப்பில்  இட்லி பாத்திரத்தை வைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், இட்லி பாத்திரத்தில் உள்ள  தட்டில் கலந்து வைத்த கலவையை ஊற்றி அதன் நடுவில் வறுத்த முந்திரியை வைத்து முடியால் முடி வைத்து, நன்கு ஆவியில் வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறினால் ருசியான சுவையான ஓட்ஸ் டயட் இட்லி தயார். இதனுடன் தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

Categories

Tech |