வெங்காய ரிங்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 1
மைதா – 1/2 கப்
சோள மாவு – 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட்– 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
பிரட் தூள் – தேவையான அளவு
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பெரிய வெங்காயத்தை எடுத்து, தோல் நீக்கியபின், வட்ட வளையங்களாக வெட்டி எடுத்து கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டின் தோல்களை நீக்கியபின், துண்டுகளாக நறுக்கி எடுத்து மிக்சிஜாரில் போட்டு நன்கு பேஸ்ட்டாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், பேக்கிங் பவுடர், சிறிதளவு உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கெட்டியாக நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொதித்ததும், ஒவ்வொரு வெங்காய வளையங்களை எடுத்து, கெட்டியாக கலந்து வைத்த மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எடுத்து, கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, அதன் மேல் சாட் மசாலாவை தூவி பரிமாறினால், வெங்காய ரிங்ஸ் தயார்.