Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த ஆரஞ்சு பழத்தில்… புதுவகையான ரெசிபி செய்து அசத்துங்க..!!

ஆரஞ்சு கேக் செய்ய தேவையானப் பொருட்கள்:

மைதா                         – 150 கிராம்
ஆரஞ்சு பழம்          – 3 பெரியது
சர்க்கரை                    – 150 கிராம்
நெய்                             – 50 கிராம்
ஆரஞ்சு ஃபுட் கலர் – சிறிதளவு

செய்முறை:

முதலில்  ஆரஞ்சு பழத்தை எடுத்து அதன் மேல் உள்ள தோலை நீக்கியபின்,  மிக்சிஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து சாறு எடுத்து மற்றோரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய்யை ஊற்றி நன்கு கொதிக்கும் அளவுக்கு உருக்கி கொள்ளவும். மேலும் உருக்கிய நெயுடன், மைதா மாவு, ஃபுட் கலரை சேர்த்து நன்கு கெட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

பின்னர் கடாயை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையை போட்டு, வடிகட்டிய ஆரஞ்சு சாறை ஊற்றியபின் ,சர்க்கரை நன்கு உருகி ஒற்றை கம்பி பதம் வரும் வரை நன்கு கொதிக்க வைத்து பாகு காய்ச்சியபின், கலந்து வைத்த மைதா கலவையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

கிளறி விட்ட மைதா கலவையானது நன்கு கெட்டியாகி இறுகியபின், அதன் மேல் உருக்கிய நெயை ஊற்றியபின், சுற்றிலும் தடவிட்டதும், மற்றோரு அகலமான முடியில் மாற்றியதும் அதன் மேல் ஆரஞ்சு பழத்துண்டுகளையோ அல்லது கிரீம்களையோ அலங்கரித்தபின், தேவையான வடிவில் வில்லைகளாக வெட்டி பரிமாறினால், ருசியான ஆரஞ்சு கேக் ரெடி.

Categories

Tech |