Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்பிலுள்ள அணைத்து சூட்டையும் விரட்ட … இந்த ஒரு கீர் போதும்..!!

ஆரஞ்சு கீர் செய்ய தேவையான பொருட்கள் :

ஆரஞ்சு பழம்                      – 3
பால்                                         – 4 கப்
கண்டென்ஸ் மில்க்         – 5 ஸ்பூன்
ஏலக்காய் தூள்                   – 1 சிட்டிகை
ரோஸ் எசன்ஸ்                  – 3 சொட்டு
பாதாம், முந்திரி                 –  6
திராட்சை                               – 4

செய்முறை:

முதலில் பாதாம் பருப்பை துருவி எடுத்து கொள்ளவும்.பின்பு பாத்திரத்தில் ஆரஞ்சு பழத்திலிருந்து, சதையை பகுதியை  மட்டும் தனியாக எடுத்து உதிரியாக உதிர்த்து  கொள்ளவும்.

அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் பாலைஊற்றி  நன்கு கொதிக்க வைத்து பாதி அளவாகும் வரை நன்கு காய்ச்சி  சுண்டயதும், ஆற வைத்து பிரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.

பிறகு  பால் நன்கு குளிர்ந்ததும் எடுத்து, அதில் கன்டென்ஸ் மில்க்கை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

அதற்கு அடுத்து அதில் ஏலக்காய்தூள், உதிர்த்து வைத்துள்ள ஆரஞ்சு சதையை சேர்த்து நன்றாக கலந்து எடுத்து, மறுபடியும் பிரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.

மேலும் பிரிட்ஜில் வைத்த கலவை நன்கு குளிர்ந்ததும் எடுத்து, அதில் துருவிய பாதாம், முந்திரி, திராட்சை, ரோஸ் எசன்ஸ் சேர்த்து, நன்கு கலந்து பரிமாறினால் ருசியான ஆரஞ்சு கீர் தயார்

Categories

Tech |