பன்னீர் சமோசா செய்ய தேவையான பொருட்கள் :
மைதா மாவு – 1 கப்
உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப
நெய் – 1 டீஸ்பூன்
பன்னீர் – 50 கிராம்
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
சாட் மசாலா – தேவைக்கேற்ப
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, நெய், சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு கெட்டியாக பிசைந்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
அதன் பின்பு மற்றொரு பாத்திரத்தில் பன்னீரை துருவி, அதன் மேல் உப்பு, சாட் மசாலா, மிளகாய் தூள் தூவி நன்கு கலந்து கொள்ளவும்.
மேலும் பிசைந்து வைத்துள்ள மைதா மாவிலிருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரியாகத் தேய்த்து, மத்தியில் கலந்த சிறிது பன்னீர் மசாலாவை வைத்து, சமோசா வடிவத்தில் மடக்கியதும் அதன் ஓரங்களில் உள்ள மாவை அழுத்தி வைத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் கடாயை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும்,மாவில் செய்து வைத்துள்ள சமோசாவை எடுத்து கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறினால் மொறுமொறுப்பான பன்னீர் சமோசா தயார்.