Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ரொம்ப கிராஞ்சியான பன்னீரீல்… மொறுமொறுப்பான நிறைந்த காரசாரமான ருசியில் செய்த… இந்த ரெசிபிய செய்து அசத்துங்க..!!

பன்னீர் ஃபிங்கர்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

பன்னீர்                                   – 1 பாக்கெட்
மிளகாய் தூள்                    – 1 டீஸ்பூன்
உப்பு                                       – தேவையான அளவு
சோள மாவு                        – 1 டேபிள் ஸ்பூன்
மைதா                                  – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள்                     – 1/2 டீஸ்பூன்
பிரட் தூள்                           – 1 கப்
எண்ணெய்                        – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பன்னிரை எடுத்து ஒரு விரல் நீளத்துக்கு, மெல்லியதாக நீளவாக்கில்வெட்டி எடுத்து கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் நறுக்கிய பன்னீர் துண்டுகளை போட்டு, அதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து விரவி ,சில நிமிடம் ஊற வைக்கவும்

பின்பு  மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி  பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். மேலும் சின்ன கிண்ணத்திதில் பிரட் துளை எடுத்து கொள்ளவும்.

அதனை அடுத்து  வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய  பன்னீர் துண்டுகளை எடுத்து மைதா கலவையில் நனைத்து கொள்ளவும்.

பின்பு அதை  பிரட் தூளில் இருபுறமும் பிரட்டிஎடுத்து  கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ருசியான பன்னீர் ஃபிங்கர்ஸ் தயார்.

Categories

Tech |