Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்து மிகுந்த காளானை வைத்து… அருமையான ருசியில்… குழந்தைகளுக்கு பிடித்த ரெசிபி செய்யலாம்..!!

பன்னீர் காளான் சீஸ் மிக்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

காளான்                          – 250 கிராம்
உப்பு                                – தேவையான அளவு
வெண்ணெய்               – 50 கிராம்
மிளகுத்தூள்                 – 1/2 டீஸ்பூன்
பன்னீர்                            – 200 கிராம்
குடைமிளகாய்          – 1
பெரிய வெங்காயம் – 1
ஃப்ரெஷ் சீஸ்                – 50 கிராம்

செய்முறை:

முதலில் காளான், பெரிய வெங்காயம், குடை மிளகாய்களை, எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.பின்பு பன்னீரையும் சதுர துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மேலும்  பாத்திரத்தில் சீஸை மெல்லியதாக துருவி எடுத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிறிது வெண்ணெயை ஊற்றி  உருகியதும், நறுக்கிய காளான், பன்னீர்  துண்டுகளை போட்டு சிறிது பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

காளான் துண்டுகள் நன்கு வதங்கியதும், அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காளானை நன்கு வேகும் வரை நன்கு கிளறிவிட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, தண்ணீர் நன்கு வற்ற விடவும்.

இறுதியில் காளான் நன்கு வெந்து தண்ணீர் வற்றி, உதிரியாக வந்ததும், அதன் மேல் துருவிய சீஸை போட்டு  அலங்கரித்தும்  இறக்கி பரிமாறினால் அருமையான ருசியில் பன்னீர் காளான் சீஸ் மிக்ஸ் ரெடி.

Categories

Tech |