Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்பில் கொழுப்பு படியாமல் இருக்கணுமா ? கவலை வேண்டாம்… இத மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

பார்லி வெஜிடபிள் உப்புமா செய்ய தேவையான பொருட்கள் :

பார்லி                              – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
கேரட்                              – 1
பீன்ஸ்                            – 10
பச்சை மிளகாய்        – 3
இஞ்சி                             – 1 துண்டு
எண்ணெய்                  – 2 ஸ்பூன்
கடுகு                              – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை         – சிறிதளவு
தண்ணீர்                       – 3 கப்
உப்பு                               – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்சிஜாரில் பார்லியை போட்டு லேசாக ஒரு சுற்று சுற்றி பரபரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பீன்ஸ், கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்த்ததும், கடுகு, கறிவேப்பிலையை போட்டு தாளித்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகளை போட்டு நன்கு வதக்கியதும், அதனுடன், நறுக்கிய பீன்ஸ், கேரட் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

மேலும் வதங்கிய கேரட், பீன்ஸுடன் உடைத்த பார்லியை போட்டு நன்கு வதக்கியபின், சிறிது உப்பு தூவி நன்கு பிரட்டி விட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, நன்கு வேக விடவும்.

இறுதியில் வேக வைத்த கலவையானது நன்கு கெட்டியாகி, உதிரியானதும் இறக்கி பரிமாறினால்,அருமையான ருசியில் சுவையான  பார்லி வெஜிடபிள் உப்புமா ரெடி.

Categories

Tech |