அன்னாசி – புதினா ஜூஸ் செய்ய தேவையான பொருள்கள்:
அன்னாசி – 200 கிராம்
புதினா – 10 கிராம்
சர்க்கரை – தேவையான அளவு
தேன் – தேவையான அளவு
ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அன்னாசி பழத்தை எடுத்து தோல் நீக்கி,சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய அண்ணாசி பழ துண்டுகள், புதினா, சர்க்கரை, தேன், ஐஸ்கட்டிகளை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
பின்னர் அரைத்த கலவையை கண்ணாடி கிளாசில் வடிகட்டியபின் அதன் மேல் புதினா, அன்னாசி பழ துண்டை வைத்து அலங்கரித்து பரிமாறினால் ருசியான அன்னாசி புதினா ஜூஸ் ரெடி.
பலன்கள்: இதில் வைட்டமின் சி, பி 6நிறைந்துள்ளது. இது இருமல், ஆஸ்துமா போன்ற நோயாளிகளுக்கு சாப்பிட கொடுப்பதால் மிகவும் நல்லது.