Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மீள முடியாத சுவையில்… அன்னாசிப்பழ அல்வா…!!!

அன்னாசிப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

அன்னாசிப்பழம்                        – 1 கப்
நெய்                                                 – 1 மேஜைக்கரண்டி
சர்க்கரை                                        – 1 மேஜைக்கரண்டி
கொழுப்பு குறைந்த பால்       – 1 கப்
செமொலினா                               – 1 கப்
இனிப்பூட்டி                                    – 3 மேஜைக்கரண்டி
ஏலக்காய் தூள்                            – 1 தேக்கரண்டி
குங்குமப்பூ                                    – சிறிதளவு

செய்முறை :

முதலில்அன்னாசிப்பழத்தை எடுத்து தோல் சீவி துண்டுகளாக நறுக்கி மிக்சி ஜாரில்போட்டு கூழாக  அரைத்து கொள்ளவும். பின்பு பாலில் குங்குமபூவை போட்டு ஊற வைக்கவும்.

பின்பு அடுப்பில் வாணலியை வைத்து அதில் அன்னாசிப்பழக் கூழைப் போட்டு அதனுடன் சர்க்கரை அல்லது இனிப்பூட்டியை சேர்த்துக் கலந்து 3 அல்லது 4 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் நெய் விட்டு செமொலினாவை போட்டு  மிதமான சூட்டில் பொன்னிறமாக  வரூம் வரை வறுக்கவும்.

மேலும், அதனுடன் பால் சேர்த்து நீர் விட்டு, நன்கு கிளறி கொண்டே இருக்கவில்லை என்றால் கட்டியாக ஆகிவிடும்.

பின்பு  பால் கலவையானது கெட்டியானவுடன், அதில் இனிப்பூட்டியைச் சேர்த்து நன்கு  வறன்டு போகும் வரை கிளறவும்.

அதனையடுத்து  ஏற்கனவே செய்து வைத்துள்ள அன்னாசிப்பழக் கலவையை எடுத்து கிளறிவிட்ட பால் கலவையில் சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.

இதனுடன், பாலில் ஊறவைத்த குங்குமப்பூவையும், ஏலக்காய் தூளையும் சேர்த்து 2 நிமிடம் சூட்டில் வைத்து நன்கு  கிளறினால் அன்னாசிப்பழ கேசரி தயார். இதனை உலர்ந்த பழங்கள், நட்ஸ் போன்ற பருப்புகளை  வைத்து அலங்கரித்து கொள்ளலாம்.

Categories

Tech |