அன்னாசிப் பழ ஜாம் செய்ய தேவையான பொருட்கள்:
அன்னாசிப் பழம் – 1
தக்காளிப் பழம் – 4
பிரவுன் சுகர் – 500 கிராம்
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
ப்ளம்ஸ் – 50 கிராம்
செய்முறை:
முதலில் முற்றிப் பழுத்த அன்னாசிப் பழத்தின் எடுத்து தோலையும், நடு தண்டு பகுதியையும் நீக்கி துண்டுகளாக வெட்டி எடுத்து, அதை மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, அதில் தக்காளிப் பழத்தை போட்டு, மூடி வைத்து சிறிது நேரம் கழித்து, அதன் தோலுரித்து மிக்சிஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அரைத்த அன்னாசிப்பழ விழுதுகள், தக்காளி விழுதுகள், பிரவுன் சுகரை போட்டு நன்கு கிளறி,அடியில் பிடிக்காதவாறு நன்கு வற்றும் வரை காய்ச்சவும்.
பிறகு காய்ச்சிய கலவையானது நன்கு வற்றி, கெட்டியாக இருகி வரும் போது நட்ஸ், பிளம்ஸ் தூவி, சிறிது கிளறி இறக்கி, பரிமாறினால் ருசியான அன்னாசிப் பழ ஜாம் தயார்.