கசகசா பட்டர் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
கசகசா – 150 கிராம்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
வெண்ணெய் – 150 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை பாத்திரத்தில் வைத்து சிறு துண்டுகளாக நறுக்கியபின்,தண்ணீரால் சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு வெங்காயத்தை தோல் நிக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
அதன் பின்பு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கசகசா, சிறிது உப்பு தூவி சில நிமிடம் நன்கு வறுத்து அதன் பச்சை வாசனை போனபின் இறக்கி ஆற வைத்து, மிக்சிஜாரில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும்.
மேலும் அடுப்பில் கடாயை வைத்து, அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு,நன்கு வதக்கியபின், அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, சிறிது வெண்ணெய் சேர்த்து, சில மணி நேரம் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
பிறகு வதக்கிய கலவையில் நறுக்கிய சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு மசாலா சிக்கனில் படும்படி நன்கு பிரட்டி, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, மிளகாய் தூள், மிளகுத் தூள் தூவி,சிக்கன் வேகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கரண்டியால் கிளறிவிட்டு, மூடி வைத்து சில நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்கவும்.
கடைசியில் சிக்கன் நன்கு வெந்து நன்கு கெட்டியானதும், அதில் மையாக அரைத்து வைத்த கசகசா கலவையை சேர்த்து, நன்கு கிளறி விட்டபின், மூடி வைத்து மறுபடியும் சிக்கனை நன்கு வேக வைத்து கிளறி விட்டு, கெட்டியானதும் இறக்கி வைக்கும் முன்பு, அதில் எலுமிச்சை சாறு, நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி நன்கு பிரட்டி பரிமாறினால், அருமையான ருசியில் கசகசா பட்டர் சிக்கன் தயார்.