Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த சிப்ஸை… செய்ததும் காலி ஆகிரும்…!!!

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்ய தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு                           – 1/2 கிலோ
உப்பு                                                       – 1/2 டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள்                       – 1/2 டீஸ்பூன்
எண்ணெய்                                          – 150 கிராம்

செய்முறை :

முதலில் உருளைக்கிழங்கை நன்றாக கழுவி, அதனை மெல்லியதாக சீவி கொள்ளவும்.

பின்பு, பாத்திரத்தில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

அதன்  பின்பு, வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.

இறுதியாக, பாத்திரத்தில் பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை போட்டு, அதன்மேல் மிளகாய் தூள், உப்பு கலவையைத் தூவி விட்டதும், எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி நல்ல  குலுக்கி எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்.

 

Categories

Tech |