Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உருளைக்கிழங்கில்…குழந்தைகளுக்கு பிடித்த… ருசியான ஃப்ரெஞ்ச் ஆம்லெட் ரெசிபி..!!

உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை                                     – 3
உருளைகிழங்கு                    – 2
வெங்காயம்                             – 1
தக்காளி                                     – 1
பச்சைமிளகாய்                      – 2
கொத்தமல்லிதழை            – சிறிதளவு
மிளகு பொடி                           – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள்                      – கால் ஸ்பூன்
உப்பு                                            – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து எடுத்து, தோலை நீக்கியபின், சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். அதன் பின்பு ஒரு கிண்ணத்தில் முட்டை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்கு  நுரை வரும்படி கலக்கி  கொள்ளவும்.

பிறகு அடுப்பில்  நான்ஸ்டிக் வாணலியை வைத்து,அதில் சிறிது எண்ணெயை சுற்றிலும்  தடவி, கலக்கி வைத்த  முட்டையை லேயரை சிறிதளவு  ஊற்றவும்.

அதன் மேல் வெங்காயம், தக்காளி, நறுக்கிய உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை, சிறிது மிளகுதூள் தூவி கொள்ளவும்.

பின்னர் அதன் மேல் மறுபடியும் சிறிதளவு முட்டை லேயரை ஊற்றியபின், அதை மூடி வைத்து,   சில  நிமிடம் நன்கு வேகவைத்து கொள்ளவும்.

பின்பு மறுபடியும் வேக வைத்த முட்டை லேயரை திருப்பி போட்டு, முடி வைத்து சில நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறினால் ருசியான  உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் தயார்.

Categories

Tech |