Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த உருளைக்கிழங்கில்… காரசாரமான ருசியில்… அருமையான ரெசிபி செய்து அசத்துங்க..!!

உருளைக்கிழங்கு மசாலா போளி செய்ய தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு       – 4
கடலை பருப்பு              – 1 மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு         – 1 மேஜைக்கரண்டி
முந்திரி பருப்பு             – 8
மைதா மாவு                  – 2 கப்
பச்சை மிளகாய்           – 1
கறிவேப்பிலை             – சிறிதளவு
கொத்தமல்லி               – சிறிதளவு
கடுகு                                 – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                  – அரை டீஸ்பூன்
உப்பு                                   – தேவைகேற்ப
நல்லெண்ணெய்          – 2 மேஜைக்கரண்டி
நெய்                                   – தேவையான அளவு

செய்முறை:

முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் உருளைக்கிழங்கை போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து இறக்கி ஆற வைத்து, அதன் தோலை நீக்கியபின்,  மத்தால் மாவாக மசித்து எடுத்து கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலையை தண்ணீரால் சுத்தம் செய்தபின், சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும், அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லிதழையை போட்டு நன்கு வதக்கியபின், மசித்து வைத்த உருளைக்கிழங்கு, ருசிக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கரண்டியால் நன்கு பிரட்டி இறக்கி வைத்து கொள்ளவும்.

பிறகு மற்றோரு சிறிய பாத்திரத்தில் மைதா மாவு, சிறிது உப்பு, லேசாக எண்ணெய் விட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  நன்கு கலந்து, கெட்டியான சப்பாத்தி மாவு போல் பிசைந்ததும், அப்படியே சில மணி நேரம் ஊற வைத்தபின் அதிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளவும்.

பின்னர்,  உருட்டி வைத்த உருண்டைகளை எடுத்து, அகலமான முடியில் வைத்து, வட்டமாக உருட்டியபின், அதன் நடுப் பகுதியில் வேக வைத்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து, முடி வைத்து,  மறுபடியும் மெல்லிய போளி மாவாக உருட்டி கொள்ளவும்.

மேலும் அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும், அதில் சிறிது நெய் ஊற்றி, உருட்டி வைத்த போளியை போட்டு, சுற்றிலும் சிறிது நெய் ஊற்றி நன்கு வெந்ததும், கரண்டியால் திருப்பி போட்டு வேக வைத்து, எடுத்து பரிமாறினால், ருசியான உருளைக்கிழங்கு மசாலா போளி ரெடி.

Categories

Tech |