Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முதிர்ந்த வயதிலும்… ஆரோக்கியத்தோடும், உடல் வலிமையோடும் இருக்கணுமா ? அப்போ இந்த ரெசிபி ஒண்ணு போதும்..!!

ராஜ்மா அடை செய்ய தேவையான பொருட்கள்:

ராஜ்மா                      – 2 கப்
இட்லி அரிசி           – அரை கப்
காய்ந்த மிளகாய் – 4
புளி                             – நெல்லிக்காய் அளவு
எண்ணெய்              – சிறிதளவு
உப்பு                           – ருசிக்கேற்ப

செய்முறை:

முதலில் ராஜ்மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் மூழ்கும் அளவுக்கு  தண்ணீர் ஊற்றி,  5 மணி நேரம் நன்கு ஊற வைத்து கொள்ளவும்.

பின்பு மற்றோரு பாத்திரத்தில் இட்லி அரிசியை எடுத்து தண்ணீர் ஊற்றி  3 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
பிறகு மிக்சி ஜாரில் ஊற வைத்த ராஜ்மா, ஊற வைத்த இட்லி அரிசி, காய்ந்த மிளகாய், புளி சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

மேலும் அரைத்து வைத்த கலவையில் ருசிக்கேற்ப உப்பு சேர்த்து, தோசை மாவு பக்குவத்தில் நன்கு கலந்து அப்படியே 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் அடுப்பில்  தோசை கல்லை வைத்து நன்கு சூடானதும், அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுற்றிலும் தடவியபின், அரைத்து கலந்து வைத்த மாவில், ஒவ்வொரு கரண்டியாக எடுத்து, சூடான தோசை கல்லில், தோசை போல் வார்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும்.

இறுதியில் வேக வைத்த தோசையானது, வெந்ததும் கரண்டியால் திருப்பி போட்டு, இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறினால், ருசியான ராஜ்மா அடை ரெடி.

Categories

Tech |