Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்பிலுள்ள வெப்பம் தணிந்து… குளிர்ச்சி ஆக வேண்டுமா ?அப்போ இந்த ஸ்னாக்ஸ் ஒண்ணு போதும்..!!

ராகி கார பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:

ராகி மாவு                         – 1 கிண்ணம்
சர்க்கரை                          – 1 கிண்ணம்
துருவியத் தேங்காய் – 1/4 கிண்ணம்
பால்                                    – 1 கிண்ணம்
ஆப்பசோடா, உப்பு      – 1/4 தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி       – சிறிது
நல்லெண்ணெய்         – தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் தேங்காயை எடுத்து ஒரு பெரிய முடியில், பூ போல உதிரியாக துருவி எடுத்து கொள்ளவும். பிறகு மிக்சி ஜாரில் சர்க்கரையை போட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு பெரிய பவுலில் ராகி மாவு, அரைத்த சர்க்கரை, ஆப்பசோடா, உப்பு, சிறிதளவு ஏலக்காய்ப் பொடியை  போட்டு எல்லாம் நன்கு ஒன்று சேரும்படி கலந்து கொள்ளவும்.

பிறகு கலந்து வைத்த கலவையில் உதிரியாக துருவிய தேங்காய் துண்டுகள், பாலை ஊற்றியபின்,  நன்கு விரவி கட்டி இல்லாத அளவுக்கு பணியாரம் கலவை போல் நன்கு கலந்ததும், 1 மணி நேரம்அப்படியே ஊற வைத்து கொள்ளவும்.

இறுதியில் அடுப்பில்  பணியார கல்லை வைத்து, நன்கு சூடேறியபின், கல்லின் ஒவ்வொரு குழியிலும், சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்த கலவையை குழிக் கரண்டியால் எடுத்து, கல்லில் உள்ள ஒவ்வொரு குழியிலும் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.

பின்பு வேக வைத்த பணியாரமானது நன்கு வெந்து, பொன்னிறமாதும், அதை கம்பியால் திருப்பி போட்டு மறுபடியும் வேக வைத்து நன்கு சிவந்ததும் சுட்டு எடுத்தால், இனிப்பான ருசியில், அருமையான ராகி பணியாரம் ரெடி.

Categories

Tech |