ரவா லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – 250 கிராம்,
சர்க்கரை – 500 கிராம்,
வறுத்த முந்திரிப் பருப்பு – 10,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய் – தேவையான அளவு
செய்முறை:
முதல்ல அடுப்புல கடாயை வச்சி ரவையை போட்டு பொன்னிறமாக வறுத்ததும், இறக்கி சில நிமிடம் ஆற வைக்கணும்.
பிறகு மிக்சிஜார்ல வறுத்த ரவையை போட்டு நைஸாக அரைத்து சலித்து எடுத்துக்கணும். பின்னர் அதே மிக்சிஜரில்ல சர்க்கரையையும் போட்டு மையாக அரைத்து எடுத்துக்கணும்.
இறுதியில் அடுப்புல கடாயை வச்சி, தேவைக்கேற்ப நெய் ஊற்றி நல்லா உருகியதும், அதில் முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நல்லா கலந்தபின் இறக்கி வைத்து, அரைச்சி வச்ச ரவை, சர்க்கரையில் சேர்த்து நல்லா கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து பரிமாறினால் ருசியான ரவா லட்டு ரெடி.