சாமை அரிசியில் மாம்பழ கேசரி செய்ய தேவையான பொருட்கள்:
சாமை அரிசி – 2 கிண்ணம்
கருப்பட்டி – 1 கிண்ணம்
நெய் – 4 மேசைக்கரண்டி
முந்திரி – தேவைக்கேற்ப
திராட்சை – தேவைக்கேற்ப
மாம்பழம் துண்டுகள் – 1 கிண்ணம்
தண்ணீர் – 6 கிண்ணம்
செய்முறை:
முதல்ல கடாயை அடுப்புல வைத்து, அதில் முந்திரி, திராட்சையை நெய்யில் போட்டு நல்லா வறுத்து எடுத்துக்கனும்
பிறகு அடுப்புல வாணலியை வைத்து, இரண்டு கிண்ணம் சாமையை எடுத்து, அதில் ஆறு கிண்ணம் தண்ணீர் ஊற்றி நல்லா வேக வைத்தபிறகு, அதனுடன் கருப்பட்டியை சேர்க்கவும்.
மேலும் அதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை நெய்யுடன் சேர்த்து ஊற்றி நல்லா கிளறி விட்டபின் பாதியளவு மாம்பழ துண்டுகளை சேர்த்து நன்கு கிளறிவிட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் வைக்கவும்.
கடைசியாக கிளறி விட்ட கலவையானது ஓரளவு நல்லா கெட்டியானதும் இறக்கிவைத்தபின் மீதி உள்ள மாம்பழ துண்டுகளை தூவி அலங்கரித்து பரிமாறினால் ருசியான சாமை மாம்பழ கேசரி தயார்.