சம்பா கோதுமை வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை – 1 கப்,
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
கேரட், பீன்ஸ் – 5
பச்சைப் பட்டாணி – சிறிதளவு,
பட்டை – 1
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
பெருஞ்சீரகம் – அரை ஸ்பூன்
பிரியாணி மசாலா – கால் ஸ்பூன்
உப்பு, நெய் – தேவையான அளவு.
பச்சைமிளகாய் – 2
கொத்தமல்லிதழை – சிறிதளவு
புதினா – ஒரு கைப்பிடி
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, கேரட் பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி தழையை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் வாணலியை வைத்து, சூடானதும் அதில் சம்பா கோதுமைகளை போட்டு நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும். பின்னர் மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு நன்கு மையாக அரைத்து பேஸ்ட் போல் எடுத்து கொள்ளவும்.
மேலும் அகலமான கடாயை வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்தபின், அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பெருஞ்சீரகம் போட்டு பொரியும் அளவுக்கு தாளித்ததும், நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு நன்கு பொன்னிறமாக வேகும் அளவுக்கு வதக்கி கொள்ளவும்.
அடுத்து வெங்காயம் நன்கு வதங்கியபின், அதனுடன் அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பேஸ்ட்டின் வாசனை போனதும், நறுக்கி வைத்த தக்காளி, பச்சை மிளகாயை போட்டு கரண்டியால் நன்கு குழையும் அளவுக்கு வதக்கவும்.
பிறகு தக்காளி நன்கு குழைந்ததும், அதனுடன் நறுக்கி வைத்த கேரட், பீன்ஸ், ருசிக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்கியபின், அதில் பிரியாணி மசாலாவை சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி விட்டபின், கேரட், பீன்ஸானது நன்கு வெந்தபின், அதில் வறுத்த சம்பா கோதுமையை போட்டு, அதனுடன் மூன்று கப் தண்ணீர் ஊற்றி, முடி வைத்து நன்கு கொதிக்க வைக்கவும்.
பின்னர் கொதிக்க வைத்த கலவையானது, நன்கு கொதித்து கெட்டியாகி, தண்ணீர் வற்றியபின், இறுகி வரும் வரை கரண்டியால் கிளறி விட்டதும், அதில் நறுக்கிய கொத்தமல்லி தழை, புதினாவை தூவி, இறக்கி வைத்து பரிமாறினால், ருசியான சம்பா கோதுமை வெஜிடபிள் பிரியாணி ரெடி.