Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த… சர்க்கரை வள்ளிக்கிழங்கில்… ருசியான அல்வா செய்து அசத்துங்க..!!

வள்ளிக்கிழங்கு அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

சர்க்கரை வள்ளி – 2 பெரியது
நெய்                          – தேவையான அளவு
முந்திரிபருப்பு      – 10
பால்                          – ஒரு கப்
நாட்டு சர்க்கரை  – ஒரு கப்
ஏலக்காய்  தூள்   – அரைஸ்பூன்

செய்முறை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கை நல்லா தண்ணீர்ல சுத்தம் பண்ணிட்டு, இட்லி பாத்திரத்தை அடுப்புல வச்சி தண்ணீர ஊற்றி நல்லா கொதிச்சதும், வேகுற எடுத்து வேக வைத்து, தோல் உரித்து நல்லா மசித்துக் கொள்ளவும்.

அடுப்பில கடாயை வச்சி அதில் சிறிது நெய் விட்டு உருகியதும், முந்திரி பருப்பை போட்டு நல்லா வறுத்தபிறகு, மசிச்சி வச்ச சர்க்கரை வள்ளிக் கிழங்கை போட்டு, நல்லா கிளறி விட்டு நெய்யை நல்லா உறிஞ்ச பிறகு, காய்ச்சி ஆற வச்ச கெட்டியான பாலை ஊற்றினதும், நல்லா கிளறி விடணும்.

மேலும் கிளறி விட்ட பால் கலவையானது ஓரளவு நல்லா கெட்டியானதும், அதில் ருசிக்கேற்ப நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட்டு சர்க்கரை நல்லா கரைஞ்சி உருகும் வரை கிளறிவிடனும்.

பிறகு, அதில் சர்க்கரை நல்லா உருகினபிறகு, நெய்யை 6 அல்லது 7 ஸ்பூன் அளவுக்கு ஊற்றிபிரட்டி விட்ட பிறகு, அதுல ஏலக்காய் தூளை தூவிட்டு நல்லா கிளறி விட்டபிறகு, சில நிமிடம் கழித்து, அல்வாவிலிருந்து நெய் பிரிஞ்சி வந்ததும் இறக்கி பரிமாறினால் ருசியான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா ரெடி.

குறிப்பு:

இந்த அல்வாவில் நாட்டு சர்க்கரையை சேர்ப்பதால், அல்வாவானது நல்ல சிவக்க வருவதோடு, அருமையான ருசியுடன், சுவையாகவும் இருக்கும்.

Categories

Tech |