Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்து மிகுந்த… சத்து மாவு பர்பி ரெசிபி…!!!

சத்து மாவு பர்பி செய்ய தேவையான பொருள்கள்: 

சத்து மாவு                           – 2 கப்,
நாட்டுச்சர்க்கரை             – 1 கப்,
சூடான பால்                       – 1 கப்,
நெய்                                       – 1 கப்,
ஏலக்காய்த்தூள்               – ஒரு சிட்டிகை,
உடைத்த முந்திரி           – சிறிது

செய்முறை:

சத்து மாவு என்பது வரகு, சாமை, தினை, கம்பு, சோளம்  சேர்த்து  எல்லாம் கலந்து  அரைத்த மாவு ரெடிமேட் மாவாகும். அடுப்பில் கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி ஏலக்காய், முந்திரியை  வறுத்து கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில், சிறிது நெய் விட்டு அரைத்த சத்து மாவை சேர்த்து லேசாக பொன்னிறமாக, நெய் பிரிந்து வரும் வரை வறுக்கவும். அதனுடன் நாட்டுச்சர்க்கரை, கெட்டியான பால், முந்திரி சேர்த்து நன்றாக கிளறவும்.
மேலும் அதனை, மிதமான தீயில் கைவிடாமல் இடை இடையே நெய் விட்டு கிளறியவுடன், சுருண்டு கெட்டியான பதத்திற்கு வரும் போது, வறுத்த ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி வைத்து ஆறிய பின் வில்லைகளாக வெட்டி பரிமாறினால் சுவையான சத்து மாவு பர்பி ரெடி.

Categories

Tech |