Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சேனைக்கிழங்கில்…அதிரடியான…சுவையில்…சுக்கா..!!

சேனைக்கிழங்கு சுக்கா செய்ய தேவையான பொருள்கள்: 

சேனைக்கிழங்கு                                – 1/4 கிலோ
பூண்டு                                                     – 1
காய்ந்த மிளகாய்                               – 4
மிளகாய் தூள்                                      – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                                        – 1/4 டீஸ்பூன்
கறி மசாலா                                          – 1/2 ஸ்பூன்
உடைத்த கடலை                              – 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்                           – 10
பெரிய வெங்காயம்                          – 2
தக்காளி                                                  – 3
சோம்பு                                                    – 1/4 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்                       – 4 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்                              – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சேனைக்கிழங்கை எடுத்துதோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி  கொள்ளவும். பின்பு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய சேனைக்கிழங்கை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்பு தக்காளியை மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.பின்பு பூண்டை எடுத்து தோல் உரித்து  பொடியாக இடித்து கொள்ளவும். சின்னவெங்காய தோலை உரித்ததும்,  பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீல வாக்கில் வெட்டி கொள்ளவும்.

மேலும் கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு,பொடியாக இடித்த பூண்டு, காய்ந்த மிளகாய், தோல் உரித்த சின்ன வெங்காயம், நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம்,தேங்காய்த் துருவல்  சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்

பின்பு அதனுடன்  மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா தூள், தக்காளி விழுது,கடலை தூள் சிறிதளவு உப்பு தூவி  தண்ணீர் ஊற்றியதும்,நன்கு  கொதித்தவுடன்,பொரித்த  கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கி பரிமாறினால் சுவையான சேனை கிழங்கு சுக்கா ரெடி.

Categories

Tech |