Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்துக்கு ஏற்ற… அருமையான ருசியில்… சுவையான ரெசிபி செய்து அசத்துங்க..!!

சேப்பங்கிழங்கு கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

சேப்பங்கிழங்கு              – கால் கிலோ
மிளகாய்ப்பொடி             – 2 தேக்கரண்டி
தனியாப்பொடி                – 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள்                     – கால் தேக்கரண்டி
கரம் மசாலாப்பொடி     – அரை தேக்கரண்டி
தேங்காய்                            – 3
உப்பு                                      – தேவையான அளவு
எண்ணெய்                         – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது  – ஒரு தேக்கரண்டி
வெங்காயம்                       – 2
சின்ன வெங்காயம்        – 10
பச்சைமிளகாய்                – 2
கடுகு                                      – கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு              – கால் தேக்கரண்டி
பட்டை, கிராம்பு                – 6
அன்னாசிப்பூ                       – 2

செய்முறை:

முதலில் சேப்பங்கிழங்கை தண்ணீர் ஊற்றி நல்ல கழுவிட்டு, சின்ன சின்ன துண்டாக நறுக்கி, குக்கரில் போட்டு சேப்பங்கிழங்கு வேகுற அளவுக்கு தண்ணீர் ஊற்றி, தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் போட்டு குக்கரை மூடிவைத்து அடுப்பில் வைத்து, குழையாத அளவுக்கு வேகவைத்து 3 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும்.

பிறகு வேக வச்ச சேப்பக்கிழங்கிலுள்ள  தோலுரித்து விட்டு, இரண்டு துண்டுகளாக நறுக்கி வச்சிட்டு, அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து பொறிக்கிற அளவுக்கு எண்ணெய் ஊற்றி, தவா சூடானதும், நறுக்கி வைச்ச சேப்பக் கிழங்கை போட்டு நல்ல வெந்து சிவந்ததும் பொரிந்ததும், அத  கரண்டிய வச்சி எண்ணெய்யை வடிச்சி சின்ன பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.

மேலும்  கிழங்கை பொறிச்சி எடுத்த எண்ணெய்யில் பாதியை குறைச்சி ஊற்றி அடுப்பில் வச்சி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, அன்னாசிப்பூ போட்டு பொறிஞ்சதும் தாளித்து, அதில் வெங்காயத்தை சின்ன துன்டுகளாக நறுக்கி போட்டு கரண்டியால் நல்ல வதக்கவும்.

பின்னர் வதக்கிய வெங்காயம் சிவந்ததும், இஞ்சி, பூண்டு விழுதை போட்டு நல்ல பச்சை வாசனை போகும்வரை கரண்டியால் வதக்கின பிறகு, அதில மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலாப்பொடி, ருசிக்கேற்ப உப்பு தூவி நல்ல வதக்கவும்.

அடுத்து வதக்கிய கலவையில் தக்காளி சிறு துண்டுகளாகவும், பச்சைமிளகாயை நிலமாக கீரி போட்டு நல்ல வதக்கியதும் தேவைகேற்ப தண்ணீர் சேர்த்து நல்ல கொதித்ததும், தேங்காயை  துண்டுகளாக நறுக்கி மிக்சிஜாரில் போட்டு அரைச்சி கொதித்த கலவையில ஊற்றியதும், பொறிச்சி வச்ச கிழங்கை போட்டு, நல்ல கொதிக்க வச்சி கெட்டியானதும் இறக்கி வச்சி பரிமாறினால் ருசியான சேப்பக்கிழங்கு கிரேவி ரெடி.

Categories

Tech |