செட்டிநாடு காளான் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
காளான் – 200 கிராம்
தக்காளி – 2
பட்டை, கிராம்பு – 4
ஏலக்காய் – 2
அண்ணாச்சி பூ – 2
வர கொத்தமல்லி – ஒருகப்
துருவிய தேங்காய் – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கிரீம் – அரை கப்
மல்லித் தளை – ஒரு கொத்து
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – சிறிது
செய்முறை:
முதல்ல காளானை நன்கு தண்ணீரில் கழுவியதும், துண்டுகளாக நறுக்கியபின், அதனுடன் கொத்தமல்லி தழை,தக்காளி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கணும்.
பிறகு அடுப்புல கடாயை வச்சி சூடெரியதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூவை போட்டு பொரிந்ததும், வர கொத்தமல்லியை போட்டு நல்லா வறுத்துட்டு, காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு வறுத்தபிறகு சோம்பு, மிளகு, சீரகம் போட்டு நல்லா வாசனை வரும் வரை வறுத்து எடுத்து, மற்ற பாத்திரத்துல மாற்றிக்கணும்.
பின்னர் அதே கடாயை அடுப்புல வச்சி, துருவிய தேங்காயை போட்டு நல்லா ஈரப்பதம் போகும் அளவுக்கு, வறுத்து இறக்கி ஆற வச்சி மிக்சி ஜாரில் போட்டு, வறுத்து வச்ச கொத்தமல்லி கலவையையும் போட்டு நல்லா மையாக அரைச்சிக்கணும்.
மேலும் அதே கடாயை அடுப்புல வச்சி, சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு பட்டை, 2 இலவங்கம், 2 ஏலக்காய், கருவேப்பிலையை போட்டு நல்லா பொரிஞ்ச பிறகு, நறுக்கி வச்ச வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்கியதும், நறுக்கி வச்ச தக்காளிய போட்டு குழையும் அளவுக்கு நல்லா வதக்கிக்கணும்.
பின்பு வதக்கின தக்காளியுடன், மஞ்சள்தூள், தேவைக்கேற்ப உப்பு தூவி நல்லா வதக்கினபிறகு, அரைச்சி வச்சிருக்கிற தேங்காய் கலவையை போட்டு நல்லா கிளறிவிட்டு எண்ணெய் பிரிஞ்சி வர்ற அளவுக்கு கொதிக்க வச்சதும், அதில் நறுக்கி வச்ச காளானை போட்டு, நல்லா பிரட்டி விடணும்.
அடுத்து பிரட்டி விட்ட காளானில், சிறிது தண்ணீர் ஊற்றி, முடிவச்சி நல்லா கொதிக்க ஆரம்பிச்சதும், இடையிடையே நல்லா கிளறிவிட்டு நன்கு காளான் நன்கு வெந்து, கெட்டியாகி எண்ணெய் தனியாக பிரிஞ்சி வந்ததும், நறுக்கி வச்ச கொத்தமல்லி தழையை தூவி விட்டு இறக்கி பரிமாறினால் ருசியான செட்டிநாடு காளான் கிரேவி ரெடி.