சிமிலி உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
எள் – கால் கப்
ராகி மாவு – 1 கப்
வேர்க்கடலை – கால் கப்
வெல்லம் – 1 கப்
செய்முறை:
முதலில்பாத்திரத்தில் எள்ளை கால் கப் எடுத்து தண்ணீர் விட்டு மூன்று முறை நன்றாக அலசி எடுத்துக் கொள்ளவும். பின்பு அலசி வைத்த எள்ளை, காட்டன் துணியை எடுத்து அதில் போட்டு சிறிது நேரம் உலர்த்தி விடவும்.
அதன் பின்பு ராகி மாவை எடுத்து அதில் தண்ணீரை சிறிது சிறிதாக புட்டு மாவு பாதத்தில் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து ராகி மாவை 15 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்கவும்.
அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அவற்றில் கால் வேர்க்கடலை சேர்த்து லேசாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மேலும் அதே கடாயில் எள்ளினை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.
இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்கடலை, எள்ளை தனித்தனியாக போட்டு பவுடர் போல் அரைத்து எடுத்து கொள்ளவும். அதன் பின்பு, ஒரு கப் வெல்லத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
இப்போது மிக்ஸிஜாரில் ராகி மாவுடன் அரைத்து வைத்துள்ள வெல்லம், எள், வேர்கடலை சேர்த்து மறுபடியும் ஒரு முறை சேர்த்து அரைத்து கொள்ளவும். இறுதியில் அரைத்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து பரிமாறினால் சுவையான சிமிலி உருண்டை தயார்.