Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சௌ சௌ காய்களை… அருமையான ருசியில்… சாம்பாருக்கு ஏற்ற… சைடிஸ் செய்யலாம்..!!

சௌ சௌ ரெய்தா செய்ய தேவையான பொருட்கள்:

சௌ சௌகாய்                – 1
வெங்காயம்                      – 1
தயிர்                                     – 1 கப்
எண்ணெய்                         – 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை   – ஒரு கைபிடி
பச்சை மிளகாய்              – 3

தாளிக்க:

கடுகு                                   – சிறிதளவு
உளுந்தம்பருப்பு            – ஒரு டிஸ்பூன்
பெருங்காயத் தூள்       – அரை கரண்டி
கறிவேப்பிலை              – ஒரு கைபிடி

செய்முறை:

முதலில் சௌ சௌ காயை எடுத்து மெல்லியதாக தோல் நீக்கியபின், அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு அடுப்பில் வாணலியை வைத்து அதில் நறுக்கிய சௌ சௌ காய்களை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு தூவி நன்கு வேக வைத்து எடுத்து, ஆற வைத்து கொள்ளவும்.

மேலும் ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து கெட்டி இல்லாமல் நன்கு கலக்கி கொள்ளவும். பின்னர் கலக்கிய தயிரில் வேகவைத்த சௌ சௌ காய்களை போட்டு நன்கு கலக்கி கொள்ளவும்.

அடுப்பில் கடாயில்யை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம்பருப்பு வெடித்ததும், கறிவேப்பிலையை போட்டு தாளித்ததும், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், பெருங்காயத் தூள் தூவி போட்டு வதக்கியபின், கலக்கி வைத்த தயிரில் சேர்த்தபின்,கொத்தமல்லி தழையை தூவி பரிமாறினால் ருசியான சௌ சௌ ரெய்தா ரெடி.

Categories

Tech |