சோயா இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
சோயா மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
உப்பு – தேவைக்கேற்ப
கேரட் – 1/4 துண்டு
குடை மிளகாய் – 1/2
தக்காளி – 1
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் சோயா மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ருசிக்கேற்ப உப்பு தூவியபின், இடியாப்ப மாவு பதத்தில் கெட்டியில்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு கேரட், குடை மிளகாய், தக்காளி எடுத்து, தண்ணீரால் சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
மேலும் கலந்து வைத்த இடியாப்ப மாவு கலவையை, இடியாப்ப குழலில் வைத்து, இட்லி பாத்திரத்தில் உள்ள தட்டில் பிழிந்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் பிழிந்து வைத்த தட்டை வைத்து, முடி வைத்து, சில நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கி ஆற வைக்கவும்.
பிறகு அடுப்பில் அகலமான வாணலியை வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க தாளித்ததும், அதனுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், கறிவேப்பிலையை போட்டு நன்கு வதக்கிகொள்ளவும்.
மேலும் வதக்கிய கலவையுடன், நறுக்கிய கேரட் துண்டுகள், வெட்டிய குடை மிளகாய், தக்காளி துண்டுகள் சேர்த்து கரண்டியால் நன்கு வதக்கியதும், கூடுதலாக ருசிக்கேற்ப உப்புச் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
பின்பு அதனுடன் ஆற வைத்த இடியாப்பத்தை, பிரட்டிய கலவையுடன் சேர்த்து, நன்கு கலந்து நிறம் மாறியபின் இறக்கி வைத்து, பரிமாறினால் ருசியான சோயா இடியாப்பம் ரெடி.