Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மாலை நேர ஸ்னாக்ஸ்க்கு ஏற்ற… அருமையான இந்த ரெசிபிய… குழந்தைகளுக்கு செய்து கொடுங்க..!!

காரமான பட்டாணி ரெசிபி செய்ய தேவையான பொருட்கள்:

நெய்                           – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம்                         – 2 டீஸ்பூன்
கடுகு                          – 1 டீஸ்பூன்
வர மல்லி                – 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி   – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்    – 1
வெங்காயம்            – 1
பட்டாணி                  – 500 கிராம்
இஞ்சி                         – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு                        – 4 பற்கள்
உப்பு                            – தேவையான அளவு
மிளகு தூள்              – தேவையான அளவு
எலுமிச்சை சாறு  – ருசிக்கேற்ப
கொத்தமல்லி        – சிறிது

செய்முறை:

முதல்ல பச்சை மிளகாய், வெங்காயம், பச்சை பட்டாணி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி தழையை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கணும்.

பின்பு கடாயை அடுப்புல வச்சி, சிறிது  நெய் ஊற்றி உருகியதும், அதில் சீரகம், கடுகு போட்டு தாளித்ததும், அதில் முழு மல்லி, ஏலக்காய் பொடி, நறுக்கி வச்ச பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து, சில நிமிடம் நல்லா  வதக்கிக்கணும்.

பின்னர் வெங்காயம் நல்லா வதங்கினதும், அதில்  பட்டாணி, நறுக்கி வச்ச இஞ்சி, பூண்டு, ருசிக்கேற்ப உப்பு,  மிளகு தூள் சேர்த்து, சில நிமிடம் பட்டாணி நல்லா வதக்கிக்கனும்.

மேலும் பட்டாணியானது ஓரளவு நன்கு வெந்தபின், கடைசியில அதில் பிழிஞ்சி வச்ச எலுமிச்சை சாறை சேர்த்து நல்லா கிளறியபின் இறக்கிவைத்து, நறுக்கி வச்ச கொத்தமல்லிதழையைத் தூவி அலங்கரித்து பரிமாறினால்,   காரமான பட்டாணி ரெசிபி ரெடி!

Categories

Tech |