Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கத்திரிக்காயில்… அருமையான ருசியில்… சூப்பரான ரெசிபி செய்து அசத்துங்க..!!

ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காய் செய்ய தேவையான பொருட்கள்:

பிஞ்சு கத்தரிக்காய்            – அரை கிலோ
உப்பு                                          – தேவையான அளவு
எண்ணெய்                             – தேவையான அளவு
கறிவேப்பிலை                    – சிறிது
கொத்தமல்லி                       – சிறிதளவு

அரைக்க:

சின்ன வெங்காயம்           – 10
தக்காளி                                  – 2
தேங்காய்த் துருவல்        – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள்                  – 2 டீஸ்பூன்
தனியாத் தூள்                     – 1 டீஸ்பூன்
இஞ்சி                                      – 1 துண்டு
பூண்டு                                     – 6 பல்
சோம்பு                                    – 1 டீஸ்பூன்
பட்டை, லவங்கம்,            – தலா 1
ஏலக்காய்                               – 1

செய்முறை:

முதலில்  கத்தரிக்காயை எடுத்து நான்கு பக்கமும் பாதியாக கீறி, காம்பு வரை நறுக்கி, வெட்டி எடுத்து கொள்ளவும். அதன் பின்பு சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டதோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். தேங்காயை எடுத்து நன்கு துருவி கொள்ளவும்.

பின்பு மிக்சிஜாரில் சின்ன வெங்காயம்,தக்காளி, தேங்காய்துருவல், மிளகாய் தூள், தனியா தூள், நறுக்கிய இஞ்சி,பூண்டு, சோம்பு, பட்டை, லவங்கம்,உப்பு, ஏலக்காயை போட்டு, தண்ணீர் சேர்க்காமல்நன்கு மையாக அரைத்து கொள்ளவும்

மேலும் அரைத்த  கலவையை எடுத்து, நறுக்கிய கத்தரிக்காயின் நடு பகுதியிலும், சுற்றிலும் சிறிது சிறிதாக அடைத்து சில நேரம்,நன்கு ஊற வைக்கவும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும், அதில் ஊறவைத்த கத்தரிக்காய்களை போட்டு,மீதியுள்ள அரைத்த மசாலா இருந்தால் கத்திரிக்காயோடு சேர்த்து,சிறிது தண்ணீர் ஊற்றி,மூடி வைத்து, நன்கு வேக வைத்து, சிறிது கிளறி விடவும்.

இறுதியில் வேக வைத்த கத்திரிக்காய் கலவை நன்கு வெந்ததும், சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லிதழையை  தூவி  இறக்கி பரிமாறினால் ருசியான  ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காய் ரெடி.

Categories

Tech |