Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஸ்கூல் முடிந்து வரும் குழந்தைகள்… ரொம்ப பிரிஸ்க்கா இருக்கணுமா ? அப்போ… மாலை நேர ஸ்னாக்ஸாக செய்து கொடுங்க..!!

ஸ்வீட் பிரெட் டோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்:

பிரெட்              – 8 ஸ்லைஸ்,
மைதா             – 4 டீஸ்பூன்,
பால்                  –  கால் கப்
சர்க்கரை        – ருசிக்கேற்ப
எண்ணெய்    – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் மைதா மாவை போட்டு கட்டி இல்லாமல் நன்கு மையாக கெட்டியாக கலந்து கொள்ளவும்.

பின்பு கலந்து வைத்த கலவையில், ருசிக்கேற்ப தேவையான  அளவு சர்க்கரையை போட்டு கரையும் வரை நன்கு கலந்து  கொள்ளவும்.

பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும், அதில்லேசாக எண்ணெய் ஊற்றி கல்லில் சுற்றிலும் தடவியபின், ஒவ்வொரு பிரெட் துண்டுகளாக  எடுத்து கலந்து வைத்த மைதா மாவு கலவையில் நனைத்து கொள்ளவும்,

மேலும் நனைத்த பிரட் துண்டுகளை,  சூடான தோசைக் கல்லில் போட்டு, பிரட்டின் சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு பொன்னிறமாக வெந்ததும், அதை திருப்பிப் போட்டு பின் பக்கமும்  நன்கு சிவக்க வேக வைத்து எடுத்து, சூடாக பரிமாறினால் ஸ்வீட் பிரெட் டோஸ்ட் ரெடி.

Categories

Tech |