இனிப்பு சக்க பிரதமன் செய்ய தேவையான பொருள்கள்:
மிகப்பொடியாக பலாச்சுளை – 15,
வெல்லம் – 3/4 கப்,
தேங்காய்ப்பால் – 2 கப்,
நெய் – தேவைக்கு,
முந்திரி – சிறிது.
செய்முறை:
முதலில் பலாச்சுளை எடுத்து அதிலுள்ள கொட்டைகளை நீக்கி எடுத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் கொட்டை நீக்கிய பலாச்சுளை போட்டு, அதனுடன் 2 கப் நீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். அதனை தொடர்ந்து பலாச்சுளை நன்கு வெந்தபின் நன்கு மசிச்சி கொள்ளவும்.
மேலும் அடுப்பில் கடாயை வைத்து அதில் வெல்லம், 1/4 கப் நீர் சேர்த்து கரையும்கொதிக்க விட்டு மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டவும். பின்பு வடிகட்டி வைத்த கலவையை பலாச்சுளையில் சேர்த்து அதனுடன் நெய்யையும் ஊற்றி மீண்டும் நன்கு கொதிக்க விடவும்.
கடைசியில் அதனுடன் தேங்காய்ப்பால் ஊற்றி நன்கு கலந்து இறக்கியபின் வறுத்த முந்திரிப் பருப்பை தூவி பரிமாறினால் சுவையான இனிப்பு சக்க பிரதமன் ரெடி.