Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நார்ச்சத்துக்கள் நிறைந்த சோளத்தில்… ரொம்ப ஸ்வீட்டான இந்த ரெசிபிய… குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்க..!!

சோளப் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

நாட்டுச் சோளம்               – 2 கப்
ஏலக்காய்த்தூள்                – 1/2 டீஸ்பூன்
பார்லி                                     – 2 டீஸ்பூன்
கேசரி பவுடர்                      – சிறிதளவு
பனை சர்க்கரை                 – தேவையான அளவு
நெய்                                        – சிறிதளவு
உலர் திராட்சை                 – சிறிதளவு
முந்திரி பருப்பு                   – சிறிதளவு

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் நாட்டுச் சோளம், பார்லி இரண்டையும் எடுத்து தண்ணீர் விட்டு தனித்தனியாக சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும். பின்பு அதை மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர்  சேர்த்து மாவு பதத்திற்கு அரைத்து பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.

அதன் பின்பு, அரைத்த மாவு  கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, பனை சர்க்கரை, ஏலக்காய்ப் பொடியை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்பு கொதிக்க வைத்த மாவானது திரவ பதத்திற்கு வந்தபின், கேசரி பவுடர் சேர்த்து  இறக்கவும்.

இறுதியில்,  வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றியதும், உளர் திராட்சை, முந்திரிப் பருப்பு போட்டு தாளித்து பாயாசத்தில் கொட்டி, சிறிது கிளறி எடுத்து பரிமாறினால் சுவையான சோள பாயாசம் ரெடி.

Categories

Tech |