இளநீர் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள் :
இளநீர் வழுக்கை – 1 கப்
கன்டன்ஸ்ட் மில்க் – ½ கப்
பால் – 2 கப்
சர்க்கரை – ½ கப்
ஏலக்காய் தூள் – ½ தேக்கரண்டி
நட்ஸ் – ¼ கப் (நறுக்கியது)
செய்முறை :
முதலில் இளநீரை எடுத்து, அதிலுள்ள தண்ணீர் மற்றும் வழுக்கைகளை மட்டும் எடுத்து கொள்ளவும். பின்பு இளநீரிலுள்ள வழுக்கை யில் பாதியை மட்டும், அதன் தண்ணீருடன் சேர்த்து மிக்சிஜாரில் ஊற்றி, கூடுதலாக சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்
பின்னர் மீதி உள்ள இளநீர் வழுக்கையை எடுத்து பொடி துண்டுகளாக நறுக்கி வைக்க கொள்ளவும்.
மேலும் அடுப்பில் கடாயை வைத்து, அதில் கன்டன்ஸ்ட் மில்க்கை ஊற்றியபின், அதனுடன் சர்க்கரை, பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பிறகு கொதிக்கின்ற பாலானது பாதியாக குறைனது வரும் வரை கரண்டியால் நன்கு கிளறி விடவும்.
பின்பு கொதிக்க வைத்த பாலானது, பாதியாக வற்றி சுண்டியபின் இறக்கி வைத்து, அதில் அரைத்த இளநீர் விழுதை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
அதன் பின்பு மீதமுள்ள நறுக்கி வைத்த இளநீர் வழுக்கை, இளநீர், ஏலக்காய் தூள், நறுக்கிய நட்ஸ்களை போட்டு நன்கு கலக்கியபின், அதை பிரீஸரில் ஒரு மணி நேரம் வைத்து பரிமாறினால் அருமையான ருசியில் ஜில்லுன்னு இளநீர் பாயாசம் ரெடி.