Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எளிய முறையில்…தக்காளி தொக்கு…செய்திட…இந்த டிப்ஸ ட்ரை பாருங்க..!!

தக்காளி தொக்கு  செய்ய தேவையான பொருள்கள்:

எண்ணெய்                               – தேவையான அளவு
கடுகு                                          – 1/2 டீஸ்பூன்
சோம்பு                                      – 1 டீஸ்பூன்
பட்டை                                      – 1
கிராம்பு                                     – 2
ஏலக்காய்                               – 2
வெங்காயம்                          – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட்     – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்                  – 2
கறிவேப்பிலை                    – சிறிது
மஞ்சள் தூள்                        – 1 சிட்டிகை
கரம் மசாலா                       – 1 டீஸ்பூன்
மல்லித் தூள்                      – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள்                    – 1 டீஸ்பூன்
தக்காளி                                 – 2

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்

பின்பு  அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு போட்டு, நன்கு வெங்காயம் வதங்கும் வரை வதக்க வேண்டும்.

அதன் பின்பு அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து  நன்கு கிளறி விடவும்.

பிறகு அதனுடன்  தக்காளியை சேர்த்து, , வேண்டுமானால் சிறிது நீர் தெளித்து நன்கு  கிளறி , சில மணி நிமிடம் வேக வைக்கவும்.

இறுதியில் தக்காளி நன்கு வதங்கியதும், அதில் உள்ள எண்ணெய்யானது  பிரிய ஆரம்பிக்கும் போது, சிறிது கறிவேப்பிலையைத் தூவியதும்,சிறிது  கிளறி இறக்கினால், சுவையான தக்காளி தொக்கு ரெடி.

Categories

Tech |