Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சப்பாத்திக்கு ஏற்ற அருமையான… இந்த ரெசிபிய… அனைவர்க்கும் சாப்பிட… செய்து கொடுத்து அசத்துங்க..!!

தவா மஸ்ரூம் செய்ய தேவையான பொருட்கள் :

மஸ்ரூம்                          – 1 கப்
குடமிளகாய்                   – 1/4 கப்
பெரிய வெங்காயம்     – 1/4
தக்காளி                             – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்                  – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள்                    – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி                      – 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள்                    – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா                    – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை    – சிறிது
எண்ணெய்                        – 1 டீஸ்பூன்
உப்பு                                     – தேவையான அளவு
எண்ணெய்                        – 2 டீஸ்பூன்
சீரகம்                                   – 1 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் மஷ்ரூம்களை எடுத்து, தண்ணீரால் நன்கு சுத்தம் செய்து, பெரிய துண்டுகளாக  நறுக்கி எடுத்து கொள்ளவும்.

பின்பு  குடை மிளகாய், வெங்காயம், தக்காளி,குடை மிளகாய், கொத்தமல்லியை நன்கு கழுவியபின், சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதன் பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய தக்காளியை போட்டு மையாக அரைத்து கொள்ளவும்.

பின்னர்  அடுப்பில் அகலமான தவாவை வைத்து சூடானதும், சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு தாளித்ததும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை  சேர்த்து நன்கு வதக்கியபின், அதிலுள்ள பச்சை வாசனை போனபின், அதனுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு  நன்கு சிவக்க வதக்கி கொள்ளவும்.

மேலும் வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் அரைத்த தக்காளியை ஊற்றியபின் நன்கு வதக்கியதும், அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலாவை சேர்த்து நன்கு கிளறிவிட்டுஅதிலுள்ள  பச்சை வாடைப் போகும் வரை நன்கு வதக்கவும்.

பிறகு மசாலாவின் பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கியபின், அதில் ருசிக்கேற்ப உப்பு போட்டு கரண்டியால் நன்கு பிரட்டி விட்டபின், நறுக்கி வைத்த காளான் துண்டுகளை சேர்த்து சில நிமிடம் நன்கு கிளறி விட்டு நன்கு காளானை நன்கு வேக வைக்கவும்.

பின்பு காளான் நன்கு வெந்ததும், அதில் நறுக்கிய குடை மிளகாயை போட்டு சில நிமிடம் நன்கு வதக்கவும். இறுதியாக குடை மிளகாயை நன்கு வெந்ததும்சிறிது கிளறி விட்டபின், அதனுடன்  மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி லேசாக பிரட்டிவிட்டதும், இறக்கி பரிமாறினால் அருமையான ருசியில் தவா மஸ்ரூம் தயார்.

Categories

Tech |