தயிர் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
தயிர் – 1 கப்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் தயிரை ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து, நன்கு கலந்து எடுத்து பரிமாறினால் ருசியான தயிர் பச்சடி தயார்.