Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த இனிப்பான தேங்காய் லட்டுவை… குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்க..!!

தேங்காய் லட்டு செய்ய தேவையான பொருட்கள்:

துருவிய  தேங்காய் – 3 கப்
சர்க்கரை                       – 2 கப்
பால்                                 – 1 கப்

செய்முறை:
முதலில்தேங்காயை எடுத்து நன்கு துருவிஉலர வைத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் பாலை ஊற்றி நன்கு , கொதிக்க வைத்ததும் அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கிளறி விட்டதும், அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

அதன் பின்பு கொதிக்க வைத்த தேங்காயானது, பாலை நன்கு  உறிஞ்சும் வரை கிளறிக் விடவும் மேலும் கிளறிய கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல், திரண்டு கெட்டியாக வரும் போது, அதை  இறக்கி வைத்து, லேசாக குளிர வைக்கவும்.

மேலும் அதை  வெதுவெதுப்பாக உள்ள நிலையில் எடுத்து, அதனை சிறு உருண்டைகளாகப் பிடித்ததும்,  அதை ஒரு தட்டில் வைத்து பரிமாறினால், ருசியான தேங்காய் லட்டு தயார்.

Categories

Tech |