Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஞாபக மறதியிலிருந்து முற்றிலும் விடுபடணுமா ? அப்போ இந்த ஒரு ரெசிபி போதும்..!!

திணை கார பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

திணை                     – 100 கிராம்
பாசிப்பருப்பு          – 50 கிராம்
நெய்                          – தேவைக்கு
மிளகு                       – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை    – சிறிது
உப்பு                          – தேவையான அளவு
முந்திரி                   – 25 கிராம்
பச்சை மிளகாய் – 2

செய்முறை:

முதலில் பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் குக்கரை வைத்து அதில் திணையையும், பாசிப்பருப்பையும் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முடி வைத்து, நன்கு வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கி ஆற வைத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து, அதில் நெய்யை ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை போட்டு தாளித்ததும், வேக வைத்த திணை, பாசிபருப்பு கலவையை போட்டு, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி கெட்டியாகி உதிரி உதிரியாக வந்தபின் இறக்கி வைத்து சூடாக பரிமாறினால் ருசியான திணை கார பொங்கல் தயார்.

Categories

Tech |