Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

திணை தேன் லட்டு… உடல் எடையை குறைக்க உதவும்…!!

தினை தேன் லட்டு செய்ய தேவையான பொருட்கள்:

திணை                                         –  100 கிராம்
ரவை                                             – 100 கிராம்
நெய்                                             – 100 கிராம்
சர்க்கரை                                   –  200 கிராம்
பாதாம் பருப்பு                       – தேவைக்கேற்ப
முந்திரி பருப்பு                     – தேவைக்கேற்ப
ஏலக்காய் தூள்                     – சிறிது
தேன்                                           – 100 கிராம்

செய்முறை: 

பாத்திரத்தில் திணை அரிசியை எடுத்து தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு  வாணலியை அடுப்பில் வைத்து அதில் தினை அரிசியை போட்டு வாசனை வரும் வரை மிதமான சூட்டில் நன்கு  வறுத்து எடுக்கவும். அதேபோல் ரவையும் சேர்த்து  தனியாக வறுக்க கொள்ளவும்.

மிக்சிஜாரில் வறுத்த தினை அரிசி, ரவை, ஏலக்காயை  சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து சர்க்கரையை சேர்த்து நன்கு கரையும் அளவுக்கு கொதிக்க வைக்கவும்.

பின்பு அரைத்த தினை ரவை மாவு, கரைத்த சர்க்கரை ஒன்றாக கலந்து கொள்ளவும். பிறகு முந்திரி பருப்பை ஒன்றிரண்டாக உடைத்து நெய்விட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் நெய்யை  நன்றாக சூடு செய்து கலந்து வைத்த கலவையில் கொட்டவும். பின்பு  சிறிது  தேன் கலந்து  சிறு  உருண்டைகளாகப் பிடித்து பரிமாறினால் சுவையான தினை தேன் லட்டு ரெடி.

Categories

Tech |