தக்காளி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
பழுத்த தக்காளி – 6
பாசுமதி அரிசி – 1/2 கிலோ
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு – 4
ஏலக்காய்,அன்னாசிப்பூ – 6
பிரியாணி இலை – 1
பச்சை மிளகாய் – 3
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய புதினா – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, 1 முறை மட்டும் நீரில் கழுவி, தனியாக எடுத்து கொள்ளவும். பின்பு தக்காளி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, புதினா ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்பு இஞ்சி, பூண்டை எடுத்து மிக்சிஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, கசக்கிய பிரியாணி இலை, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பின்பு வதக்கிய கலவையானது நன்கு பொன்னிறமாக வதங்கியதும், அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், முழு பச்சை மிளகாய், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
அடுத்து அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதோடு நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.