தக்காளி மீன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – 4
மீன் – 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பொடித்த சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தனியா தூள் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில்மீனை எடுத்து துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும். அதன் பின்பு தக்காளியை துண்டுகளாக நறுக்கி மிக்ஸிஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு இஞ்சி. புண்டையும் போட்டுமிக்சிஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். மேலும் சோம்புவை பொடி செய்து கொள்ளவும்.
பின்பு அரைத்த தக்காளியுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடித்த சோம்பு, மிளகுத்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
பிறகு மீன் துண்டுகளை எடுத்து, கலக்கி வைத்த மசாலா மீது தடவி, சில மணி நேரம் உற வைத்து கொள்ளவும்.
அதனை அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து, அதில்பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்து பரிமாறினால் ருசியான தக்காளி மீன் வறுவல் ரெடி.