தக்காளி குருமா செய்ய தேவையான பொருட்கள் :
தக்காளி – 2
வெங்காயம் – 1
எண்ணெய் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
அரைக்க:
தேங்காய் – 2 துண்டு
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 4 பல்
முந்திரி – 10
தாளிக்க:
கடுகு – அரை ஸ்பூன்
பெருஞ்சீரகம் – அரை ஸ்பூன்
மிளகு – அரை ஸ்பூன்
செய்முறை:
முதலில் தேங்காய், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
பின்பு நறுக்கிய தேங்காய், பெருஞ்சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய் பூண்டு, முந்திரியை போட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம், மிளகை போட்டு தாளித்ததும், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு வெங்காயம் பாதியாக வேகும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.
மேலும் வதங்கிய வெங்காயத்துடன்,நறுக்கிய தக்காளியை போட்டுநன்கு வதக்கியதும், அரைத்த தேங்காய் கலவையை போட்டு, ருசிக்கேற்ப உப்பு தூவி தேவைகேற்ப தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கி வைத்து, நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறினால், ருசியான தக்காளி குருமா ரெடி.