Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சருமத்திற்கு அழகு சேர்க்கும் தக்காளியில்… ருசியான ஊறுகாயை செய்து… சாதத்துடன் அசத்துங்க..!!

தக்காளி ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:

தக்காளி                               – 1/4 கிலோ
காய்ந்த மிளகாய்            – 2
மிளகாய்த் தூள்               – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                     – 1/2 டீஸ்பூன்
தனியா தூள்                      – 3 டீஸ்பூன்
உப்பு                                      – தேவையான அளவு
எண்ணெய்                         – 1 குழிக்கரண்டி
பெருங்காயம்                   – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை                 – 1 கொத்து

செய்முறை:

முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தக்காளியை போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து மசித்து எடுத்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில்  வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.

 பின்னர் அதில் மசித்த தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு பெருங்காயம் போட்டு நன்கு  வதக்கவும்.

மேலும் கொதித்த கலவையானது, நன்கு கெட்டியாகி, எண்ணெய் மிதந்து வந்ததும், இறக்கி பரிமாறினால் சுவையான தக்காளி ஊறுகாய் ரெடி. இதை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பிறகு இதை ஒரு கண்ணாடி பாட்டலில் அடைத்து வைத்து, அதை பத்து நாட்களுக்கு மேல் பயன்படுத்தலாம்.

Categories

Tech |