உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 200 கிராம்
மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை எடுத்து தண்ணீரால் சுத்தம் செய்து, மெல்லிய அளவில், சிறு சிறு துண்டுகளாக நறுக்கியபின், மஞ்சள் தூள் சேர்த்து உருளைக்கிழங்கை சுற்றிலும் படும்படி நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் அகலமான கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு, சிறிதளவு மிளகாய்த் தூள், கரம் மசாலாவைச் சேர்த்து நன்கு கிளறி விட்டபின், சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறியபின் மூடி வைத்து நன்றாக வேக விடவும்.
பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கு கலவையானது பதியளவாக அரை வேக்காடு வெந்ததும்,சிறிதளவு உப்பு சேர்த்தபின், அடியில் பிடிக்காதவாறு அடிக்கடி கிளறி விட்டு கொள்ளவும்.
மேலும் உருளைக்கிழங்கை அதிகம் வேக வைத்தால், கிழங்கு ஒன்றோடு ஒன்றுஒட்டிக் கொள்ளும் என்பதால் முக்கால் பதம் வேக வைத்தால் போதுமானது. எனவே, முக்கால் பதம் வெந்தபின் சிறிது கிளறிவிட்டபின், இறக்கி வைத்து பரிமாறினால் ருசியான உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.