Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுட சுடவென உளுந்த வடை… தீபாவளி ஈவினிங் ஸ்னாக்ஸ்…!!!

உளுந்த வடை செய்ய தேவையான பொருள்கள்: 

உளுந்து                                        – 1 கப்,
வெங்காயம்                               – 4,
பச்சைமிளகாய்                        – 2,
மிளகு, சீரகம்                             – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய்                     – தேவைக்கு,
பெருங்காயத்தூள்                   – சிறிதளவு,
சமையல் சோடா                    –  1 சிட்டிகை.

செய்முறை:

பாத்திரத்தில் உளுத்தம்பருப்பை எடுத்து தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறவைத்து, பின்பு மிக்சிஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு மிளகை பொடியாக தட்டி எடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பொடித்த மிளகு, சீரகம், சமையல் சோடா, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி வடைகளை போல் தட்டி எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து  எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், அதில் உருண்டைகளாக உருட்டி வைத்த கலவையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறினால் சுவையான உளுந்த வடை ரெடி. இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.  இது உடம்புக்கு நல்லதும் கூட.

Categories

Tech |