Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஈவினிங் ஸ்னாக்ஸாக… குழந்தைகள் அதிகம் விரும்பும்… ருசியான இந்த ரெசிபிய செய்து கொடுங்க போதும்..!!

உப்புமா செய்ய தேவையான பொருட்கள்: 

ரவை                               – 2 கப்
நெய்                                 – 2 தேக்கரண்டி
எண்ணெய்                    – 2 தேக்கரண்டி
கடுகு                                – கால் தேக்கரண்டி
உளுந்து                          – கால் தேக்கரண்டி
வெங்காயம்                  – 1
பச்சை மிளகாய்          – 2
தக்காளி                           – 1
கறிவேப்பிலை            – தேவையானஅளவு
கொத்தமல்லி தழை – கை அளவு
உப்பு                                  – தேவைக்கேற்ப்ப
துருவிய தேங்காய்   – கால் கப்
வெந்நீர்                            – 4 கப்

செய்முறை:

முதலில் பெரிய வெங்காயத்தின் தோலை நிக்கி விட்டபின், அதனுடன் பச்சை மிளகாய், தக்காளியை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிறிதளவு நெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் ரவையை போட்டு அதன்  பச்சை வாசனை போகும் வரை சில நிமிடம் நன்கு வறுத்து, மற்றோரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.

மேலும் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்த பருப்பு போட்டு, தாளித்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து, வெங்காயம் நன்கு சிவக்க வதக்கியபின், அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் அதில் தக்காளி நன்கு வதங்கியதும், 4 கப் வெந்நீரை ஊற்றி, ருசிக்கேற்ப தேவையான அளவு உப்பு தூவி, மூடி வைத்து சில நிமிடம் கொதிக்க வைத்து,வறுத்த ரவையை சிறிது சிறிதாக கொதிக்கின்ற தண்ணீரில் சேர்த்து கெட்டி வராமல் கரண்டியால் நன்கு கலக்கவும்.

பிறகு கலந்த ரவையை சில நிமிடம் நன்கு வேக வைத்து, இடையிடையே கரண்டியால் நன்கு கிளறி விட்டு கெட்டியாக ஆரம்பிக்கும் போது,தேவையான அளவு நெய் ஊற்றி, சிறிது கொத்தமல்லியை தூவி, தேவைபட்டால் துருவிய தேங்காயை போட்டு கரண்டியால் நன்கு கிளறிவிடவும்.

இறுதியில் கிளறி விட்ட கலவையானது , நன்கு கெட்டியாகி உதிரியாக வந்ததும், இறக்கி வைத்து  சூடாக பரிமாறினால் ருசியான ரவா உப்புமா ரெடி.

Categories

Tech |