Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ரொம்ப இனிப்பான ஸ்னாக்ஸ்ச… குழந்தைகளுக்கு செய்து கொடுக்கணுமா ? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க..!!

உருளைக்கிழங்கு அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு         – 8
சர்க்கரை                             – 1/4 கப்
பாதாம்                                 – 1 கையளவு
பிஸ்தா                                – 4
நெய்                                      – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து உருளைக்கிழங்கை போட்டு,தண்ணீர் ஊற்றி,நன்கு வேக வைத்து, தோல் உரித்து, மசித்து எடுத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி பாதம்,பிஸ்தா போட்டு வறுத்து எடுக்கவும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மசித்த உருளைக் கிழங்கை போட்டு  பொன்னிறமாகும் வரை நன்கு வதங்கியதும், அதில்  குறைவான நெய் இருந்தால், சற்று அதிகமான நெய்யை ஊற்றியதும், சிறிது கிளறி விடவும்.

பின்பு  அதில் சர்க்கரை சேர்த்து, நன்கு கரையும் வரை கிளறி விட்டு, வெந்ததும் வறுத்த பாதம், பிஸ்தாவை போட்டு நன்கு கிளறி இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு அல்வா தயார்.

Categories

Tech |