வாழைத்தண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு – 200கிராம்
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2
தயிர் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் வாழைத்தண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கியதும், அதில் உள்ள நாரை தனியாக எடுத்து விடவும். பின்பு தேங்காயை எடுத்து நன்கு பொடியாக துருவி எடுத்து கொள்ளவும்.
பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய வாழைத்தண்டு, தேங்காய்துருவல், பச்சைமிளகாயை போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்ததும், அதில் உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கியதும், அதை அரைத்த வாழைத்தண்டு கலவையில் ஊற்றி, கரண்டியால் சிறிது கிளறியபின், தோசை அல்லது இட்லியுடன் பரிமாறினால் ருசியான வாழைத்தண்டு சட்னி ரெடி.